உள்நாடுசூடான செய்திகள் 1

JustNow: நாட்டைவிட்டு தப்பிக்க முயன்ற நதாஷா நள்ளிரவில் அதிரடியாக கைது!!

(UTV | கொழும்பு) –

மதங்களை இழிவுபடுத்திய நதாஷா இதுருஷூரிய என்ற பெண் நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்த வேலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சற்றுமுன் (28) நள்ளிரவு குற்றப்புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பௌத்தம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களை இழிவுபடுத்திய யுவதி ஒருவர் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நேற்று (27) முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அண்மையில் கொழும்பில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் நடைபெற்ற நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை நடத்தும் வாய்ப்பு நதாஷா என்ற யுவதிக்கு கிடைத்தது.

அதன் தொடக்கத்திலிருந்தே, அவர் பௌத்தம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய மதங்களை அவமதித்து பார்வையாளர்களை சிரிக்க வைத்தார்.

பௌத்த பாடசாலைகள் குறித்தும் அவர் பொதுவெளியில் கடுமையாக விமர்சித்தார்.

அந்த அறிக்கையில் அவமதிப்பு மட்டுமின்றி கெட்ட வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அடிப்படை சம்பளம் 700 ரூபாவாக நிர்ணயம்

பெல்ஜியத்தில் இருந்த 43 பேர் நாடு திரும்பினர்

இனி அரசியல் சண்டி தனங்களுக்கு இடமில்லை – ஜனாதிபதி அநுர

editor