(UTV | கொழும்பு) –
ஜப்பான் விஜயத்தை நிறைவு செய்து ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் வெற்றிடமாகியுள்ள பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு ஒருவரை நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான கடிதம் நிதி அமைச்சின் செயலாளரினால் ஜனக்க ரத்நாயக்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், கடிதம் ஜனக்க ரத்நாயக்கவினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக்க ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான யோசனை பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්