(UTV | கொழும்பு) –
கடவுச்சீட்டு தொடர்பான மோசடிகளை தடுப்பதற்கும், வரிசைகளை தவிர்ப்பதற்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் மக்கள் இலகுவாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ளும் வகையில் 50 பிரதேச செயலக அலுவலகங்களில் வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி, எதிர்வரும் மாதத்தில் புகைப்படம், கைரேகை போன்றவற்றை சேகரிக்க, பிரதேச செயலகங்களில் 50 இடங்கள் ஸ்தாபிக்கப்படள்ளது. இம்முறையின் ஊடாக விண்ணப்பதாரர் ஒருவர் தனது கடவுச்சீட்டை 3 நாட்களுக்குள் வீடுகளுக்கே பெற்றுக்கொள்ள முடியும்.
அதன்பிறகு எவரும் பத்தரமுல்லைக்கு வர தேவையில்லை. மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டு நேரடியாக வீட்டுக்கு அனுப்பப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.அதேநேரம் அமைச்சரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளமை தொடர்பில் வெளியான தகவல் குறித்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், “எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன. அவ்வாறான அச்சுறுத்தல் இருக்கலாம் என எனக்கு புலனாய்வு அறிக்கை கிடைத்துள்ளது. ஆனால் இவ்வாறான அச்சுறுத்தல்கள் வருமென்று அறிந்தே இந்த பொறுப்பை ஏற்றேன். இப்போது நான் இங்கு இருக்கும் போதே போதைப்பொருள் கடத்தல், பாதாள உலக செயற்பாடுகளை ஒழிக்க வேண்டும்.
அப்படி மிரட்டல்கள் இருந்தாலும் ஒரு அடி கூட பின்வாங்கமாட்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්