உள்நாடு

 வீழ்ச்சியடைந்த டொலரின் பெறுமதியால் , தங்கத்தின் விலையில் மற்றம்

(UTV | கொழும்பு) –  வீழ்ச்சியடைந்த டொலரின் பெறுமதியால் தங்கத்தின் விலையில் மற்றம்

டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதால் தங்கத்தின் விலையில் பாரிய மற்றம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்

22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 150,000 ரூபாவாக குறைந்துள்ளதாக செட்டித் தெரு தங்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

24 கரட் தங்கத்தின் பவுன் ஒன்றின் விலை நேற்றையதினம்(20) 160,000 முதல் 165,000 ரூபா வரை இருந்ததாக தங்க வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த சில நாட்களாக டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் கடுமையான உயர்வு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தங்கத்தின் விலையிலும் வீழ்ச்சி பதிவாகி வருவதுடன் 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை கடந்த இரண்டு வாரங்களுக்குள் 11 ஆயிரம் ரூபாவிற்கும் மேல் குறைவடைந்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆர்.ஆர் இன் உடலுக்கு நீதிபதி இளஞ்செழியன், அமைச்சர் டக்ளஸ் உள்ளிட்டவர்கள் அஞ்சலி!

பாராளுமன்றத்திற்கு சுற்றுப்பயணம் மேற் கொண்ட அங்கவீனமுற்றோர்!

இன்று முதல் இணையம் ஊடாக முன்பதிவு