உள்நாடு

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் பொய்யான செய்தி பற்றி பொலிஸார் அறிக்கை

(UTV | கொழும்பு) –  சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் பொய்யான செய்தி பற்றி பொலிஸார் அறிக்கை

தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படும் தவறான பதிவொன்று குறித்து பொலிஸார் இன்று (18) விளக்கம் அளித்துள்ளனர்

பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை

சிறுவர்களைக் கடத்த முற்பட்ட குழுக்கள் தொடர்பாக அக்மீமன பொலிஸாரால் பகிரங்கமாக அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளதாக ஒரு வைரலான சமூக ஊடகப் பதிவு தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், அக்மீமன பொலிஸார் அவ்வாறான எந்தவொரு பொது அறிவித்தலையும் வெளியிடவில்லை என்று குறிப்பிட்டுள்ள பொலிஸ் தலைமையகம், குறித்த சமூக ஊடகப் பதிவு போலியானது என நிராகரித்துள்ளது.

மேலும், அக்மீமன அல்லது யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுகளில் இதுபோன்ற சிறுவர் கடத்தல்கள் அல்லது கடத்தல் முயற்சிகள் எதுவும் பதிவாகவில்லை என அக்மீமன பொலிஸ் பொறுப்பதிகாரியை (OIC) மேற்கோள் காட்டி பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் இதுபோன்ற தவறான, பொய்யான பதிவுகளால் பொதுமக்கள் எவரும் பீதியடைய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொதுத்தேர்தலில் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு பதிலாக ஜீவன் தொண்டமான்

வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் நியமிப்பு

தேர்தல் முடிவுகளைப் போன்றே கொவிட் முடிவுகளும் வெளியாகின்றன