(UTV | கொழும்பு) – வலி நிவாரணி மாத்திரை உட்கொண்டால் உயிராபத்து ஏற்படலாம்
வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் காய்ச்சல் உள்ள நபரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
வலி நிவாரணி பயன்படுத்துவது தொடர்பில் இலங்கையில் மக்களுக்கு அவசர எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.
காய்ச்சலுக்கு பரசிட்டமோல் தவிர்ந்த வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் வைத்தியர் உபுல் திஸாநாயக்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் காய்ச்சல் உள்ள நபரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். அதன்படி நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் போது வைத்தியர்களும் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.
தனியார் மருத்துவ நிறுவனங்களிலுள்ள தகுதியற்ற வைத்தியர்கள் டெங்கு நோயாளர்களுக்கு பரசிட்டமோலுக்கு பதிலாக வலி நிவாரணி மருந்துகளை வழங்குவதால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளன.
தகுதி வாய்ந்த வைத்தியர்கள் சிலர் இதே தவறை செய்வதால் நோயாளர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர்.
எனவே காய்ச்சலுக்கு மருந்து எடுக்கும் போது பரசிட்டமோலுக்கு பதிலாக வேறு வலி நிவாரணி கொடுத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மக்களை எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්