(UTV | கொழும்பு) – நாளை கொழும்பில் வெள்ளை மலர்களுடன் நினைவேந்தல் நிகழ்வு
கொழும்பிலும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய (18) காலை 10.30 மணிக்கு பொரளை கனத்தை சுற்றுவட்டத்தில் இந்நிகழ்வுகள் இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
வடக்கு கிழக்கில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலேயெ இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந் நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்கள் வெள்ளை மலர்களை கொண்டுவரலாம் எனவும், ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்லாமையும் குறிப்பிடத்தக்கது,
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්