உள்நாடு

சவுதி அரேபிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக நஸீர் அஹமட் மற்றும் செயலாளராக ரிஷாட் பதியுதீன் தெரிவு

(UTV | கொழும்பு) –  இலங்கை – சவுதி அரேபிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக நஸீர் அஹமட் மற்றும் செயலாளராக ரிஷாட் பதியுதீன் தெரிவு

இலங்கை – சவுதி அரேபிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை – சவுதி அரேபிய பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான செயற்குழு உறுப்பினர்களை தெரிவு செய்யும் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் பின் நஸார் பின் அல்கஹ்தானி (Khalid bin Hamoud bin Nasser Al – Qahtani) இந்நிகழ்வில் விசேட வருந்தினாராக கலந்துகொண்டிருந்ததுடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசாநாயக்கவும் இதன்போது கலந்துகொண்டிருந்தார்.

அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜே.சி. அலவதுவல, எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோர் நட்புறவுச் சங்கத்தின் உப தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டனர். பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டார். மேலும், இஷாக் ரஹ்மான் மற்றும் விஜித ஹேரத் ஆகியோர் முறையாக உதவிச் செயலாளராகவும், பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன்போது உரையாற்றிய சபாநாயகர மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிடுகையில், இந்நாட்டின் நீர், வலுசக்தி, சுகாதாரம், நெடுஞ்சாலைகள் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் பல்வேறு 15 வேலைத்திட்டங்களுக்கு 425 மில்லியன் டொலர் அபிவிருத்திக் கடன்கள் வழங்கியுள்ளமை தொடர்பில் தனது நன்றியைத் தெரிவிப்பதாகத் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த, நஸீர் அஹமட் குறிப்பிடுகையில்,

இலங்கை மற்றும் சவுதி அரேபியாவுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த தன நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டார்.

அமைச்சர்கள், இராஜங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

9 பேர் கொண்ட குழு நியமனம் – வர்த்தமானி வௌியீடு.

பலநோக்குக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

எசல பெரஹராவை முன்னிட்டு – விசேட ரயில் சேவைகள்.