(UTV | யாழ்ப்பாணம் ) – பாடசாலை மாணவியை கடத்த முயற்சி!- யாழில் பதற்றம்
யாழ்ப்பாணம் ஒஸ்மோனியா கல்லூரி வீதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சித்தார் என தெரிவித்து வெளியிடத்தைச் சேர்ந்த ஒருவர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு, தாக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் மன்னார் பகுதியில் பாடசாலை மாணவர்களை வாகனங்களில் கடத்த முயற்சிக்கும் சம்பவங்கள் பதிவாகியிருந்தது.
இந்நிலையில், இன்று காலை யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஒஸ்போனியா கல்லூரி வீதியில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பிரதேசத்தில் பாடசாலை சென்ற மாணவி ஒருவரை ஒருவர் நீண்ட நேரமாக அவதானித்துக் கொண்டிருந்ததை அவதானித்த அப்பகுதி மக்கள் குறித்த நபரை பிடித்து விசாரித்த போது அவரது பதில் சந்தேகத்துக்கிடமாக இருந்ததினால் அவரை மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්