உள்நாடு

 களுத்துறை மாணவி மரணம் – புதிய திருப்பம்

(UTV | களுத்துறை) –  களுத்துறை மாணவி மரணம் – புதிய திருப்பம்

களுத்துறை சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விடுதி உரிமையாளரின் மனைவியை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் உட்பட நான்கு சந்தேகநபர்கள் இன்று மீண்டும் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விடுதி உரிமையாளரின் மனைவியை இரண்டு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்க களுத்துறை நீதவான் நீதா ஹேமமாலி ஹால்பண்தெனிய உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறுமியின் தோழி, தோழியின் காதலன் மற்றும் பிரதான சந்தேகநபரின் காரை எடுத்துச் சென்ற நண்பர் ஆகியோரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான, சிறுமி இறக்கும் போது விடுதியில் தங்கியிருந்த நபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்ட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம் !

வளமான நாட்டை கட்டியெழுப்பும் வகையில் புத்தாண்டு அமையட்டும்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் கருங்கல் அகழ்வு அமைய வேண்டும்