உள்நாடு

பிரதமராகிறார் மஹிந்த ? தீவிரமாகும் கொழும்பு பாதுகாப்பு!

(UTV | கொழும்பு) –

பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமனம் பெறவுள்ளாரென்றும் அதற்காகவே கொழும்பில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அவ்வாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டமைக்கான காரணம் இப்போது வெளியாகியுள்ளது.

கொழும்பு பல்கலைகழக பழைய மாணவர் ஒன்றுகூடலுக்காக 2,000 உணவுப் பொதிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டதை, தவறாக புரிந்து கொண்டதே கொழும்பில் திடீர் பாதுகாப்பு அதிகரிப்புக்கு காரணமென தெரியவந்துள்ளது.கொழும்பு பல்கலைகழகம், காலிமுகத்திடல், தும்முல்லை சந்தி உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பொலிசார், ஆயுதம் ஏந்திய இராணுவம், விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டிருந்தனர்.

உளவுத்தகவல் ஒன்றினடிப்படையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் முன்னர் தெரிவித்திருந்தார். .அனைத்து பல்கலைகழக்கழ மாணவர் ஒன்றியத்தினர், வார இறுதியில் கொழும்பு நகரில் திடீர் முற்றுகையில் ஈடுபட்டு, அரச நிறுவனங்களை கையகப்படுத்தி, புதிய போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும், இதில் 750 பேர் வரையில் பங்கேற்பார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டதாக தெரிய வந்தது.கொழும்பு பல்கலைகழக மாணவர் தரப்பினர், 2000 உணவுப் பொதிக்கு முன்பதிவு செய்திருந்த தகவலை உளவுத்துறை பெற்றதை தொடர்ந்தே, இந்த புலனாய்வு தகவல் வெளியிடப்பட்டதாக தெரியவந்துள்ளது.

சனிக்கிழமை பழைய மாணவர் ஒன்றுகூடல் நடைபெற்றதாகவும், அதற்காக இந்த உணவுப் பொதிகள் முன்பதிவு செய்யப்பட்டதாகவும் அதனை போராட்ட முன்னேற்பாடு என பாதுகாப்பு தரப்பு நினைத்து விட்டதாகவும் இப்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் கீழ் இயங்கும் விசேட புலனாய்வுப்பிரிவு ஒன்றே இந்த தகவலை வழங்கியதாகவும் அதனடிப்படையில் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது.அடிப்படையற்ற புலனாய்வுத்தகவல்களால் பாதுகாப்பு தரப்பினரை அலைக்கழித்தமை ,அவர்களுக்கான போக்குவரத்து செலவு உட்பட்ட விடயங்களால் இது தொடர்பில் ஜனாதிபதி கடும் அதிருப்தி கொண்டுள்ளதாக மேலும் அறியமுடிந்தது.

இவ்விவகாரம்  தொடர்பில் ரணில் தெரிவித்த கருத்துக்கள்…https://www.youtube.com/watch?v=jcprBfCTq0A

https://www.youtube.com/watch?v=jcprBfCTq0A

Thamilan

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“இறக்குமதி தடை முழுமையாக நீக்கம்” நிதி இராஜாங்க அமைச்சர்

பேரூந்து விபத்து தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தலுக்கு தயார் : அறிக்கை கோரும் ஜனாதிபதி