உலகம்உள்நாடு

கர்நாடக தேர்தலில் வென்றார் ராகுல் காந்தி – ஹிஜாப் அணிவதை நிறுத்திய அமைச்சர் தோல்வி

(UTV  Editorial| கொழும்பு) –    “பிரதமர் மோடி யாராலும் தோற்கடிக்கடிப்பட முடியாதவர், பாஜகவின் அதிகாரம் நிரந்தரமானது. அதிகாரம் நிறைந்த மோடி என்கிற மாயையை உருவாக்கினார்கள். அந்த மாயை இன்றைக்கு கர்நாடகா தேர்தல் முடிவின் ஊடாக உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது என இந்தியா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது

கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்துவிட்டது. தற்போதைய தேர்தல் ஆணைய முடிவுகளின் படி காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை விட கூடுதலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆகையால் கர்நாடகாவில் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை அமைக்கிறது.

கர்நாடகாவில் சுமார் 135 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. பாஜக 60  தொகுதிகளிலும், மஜத 20தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

இவ்வாறு இந்தியாவின் ஆட்சிகளில் பெரும் மாற்றத்தை சந்தித்துவரும் நிலையில் மோடியின் பாரதிய ஜனதா கட்சி வீழ்ச்சியை நோக்கி நகர்வதால் அடுத்த பிரதமர் பதவியில் மோடியின் அணி பாரிய தோல்வியை சந்திக்கக்கூடும் என இந்தியா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது

 

தென்னிந்தியாவின் மாநிலங்களில் தமிழ் நாட்டை ஸ்டாலின் அணியும்,  கேர்ளா தொகுதியில் மோடி அணியை வீழ்த்தி கூட்டணி ஒன்று வெற்றி பெற்றிருந்த நிலையில், இப்போது கர்நாடவை ஆட்சி செய்த மோடி அணி வீழ்தப்பட்டு பாஜகயின் ஆட்சியை மக்கள் முழு தென்னிந்தியாவையும் விட்டு விரட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி டெல்லிக்கும் பெங்களூருக்கும் அடிக்கடி விமானத்தில் பறந்து கர்நாடகா முழுவதும் தொடர்ந்து தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

கர்நாடகத் தேர்தலில் பாஜகவை எப்படியாவது வீழ்த்தி தென்னிந்தியாவில் இருந்து அக்கட்சியின் ஆட்சியை அப்புறப்படுத்தவும், மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி இந்தியாவிலிருந்தும் அக்கட்சியின் ஆட்சியை அப்புறப்படுத்தவும் காங்கிரஸ் முயற்சித்தது. அதன் முதற்படியை காங்கிரஸ் கட்சி கர்நாடக தேர்தல் முடிவின்  ஊடாக வெற்றி என்ற இலக்கை அடைந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்புரிமையும் மோடி அரசு நீக்கிருந்தமை மக்களுக்குள் பெரும் விமர்சனமாகியிருந்தது. அவ்வாறான விமர்சனங்களை மோடி அரசு பெற்று, இன்று மோடியின் ஆட்சியை மக்கள் நிராகரிக்கும் நிலைக்கு தள்ளப்படுள்ளது.

இதேவேளை, முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடுத்து நிறுத்தி, அங்கு மதவாத்த்தை ஊருவாக்கிய  பா.ஜ.காவின் கல்வி அமைச்சர் பிசி நாகேஸ் படுதோல்வி அடைந்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

ஆனால் கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியாகும் அதே சமயம் உத்தரப்பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. அங்கு பரவலாக பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சாதனையாளர்களையும், வீரர்களையும் கௌரவித்த சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகம் !

அரிசி மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

ரணிலின் அறிவிப்புக்கு பின்பே எமது அறிவிப்பு : பசில்