உள்நாடு

 சீ ஷெல்ஸ்- இலங்கைக்கு இடையில் நேரடி விமான சேவை

(UTV | கொழும்பு) –  சீ ஷெல்ஸ்- இலங்கைக்கு இடையில் நேரடி விமான சேவை

சீ ஷெல்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க ஏர் சீ ஷெல்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வாராந்திர விமான சேவைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சீ ஷெல்ஸ் மற்றும் கொழும்புக்கு இடையில் வாரத்திற்கு இரண்டு முறை நேரடி விமான சேவைகளை மேற்கொள்ள ஏர் சீ ஷெல்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

சீ ஷெல்ஸில் இருந்து கொழும்புக்கான முதலாவது விமானம் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறந்த சுற்றுலா, மருத்துவம் மற்றும் வர்த்தக வாய்ப்புகளை கொண்ட இடமாக இலங்கை இருக்கும் என ஏர் சீ ஷெல்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.சுற்றுலாவின் சொர்க்கம் சீஷெல்ஸ்: தடுப்பூசி அதிகம் போட்டும் திணறல்| Dinamalar

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்றும் பல பொலிஸ் பிரிவுகள் முடங்கியது

அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்

பசில் ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்