(UTV | கொழும்பு) – கிணற்றில் விழுந்து சிறுவன் பலி
கஹட்டகஸ்திகிலிய நெகுடவெவ பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து 16 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீட்டிற்கு அருகில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது பாதுகாப்பற்ற கிணற்றில் தண்ணீர் நிறைந்திருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්