உள்நாடு

துருக்கியில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை ஆடைகள் வழங்கி உதவி!

(UTV | கொழும்பு) –  துருக்கியில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை ஆடைகள் வழங்கி உதவி!

அண்மையில் துருக்கியில் ஏற்பட்ட நிலஅதிர்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை 4.6 தொன் ஆடைகளை உதவியாக வழங்கியுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியினால் இலங்கைக்கான துருக்கி தூதுவரிடம் நேற்று இந்த ஆடைகள் கையளிக்கப்பட்டுள்ளன.
இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை எடுத்துரைத்த அமைச்சர் அலி சப்ரி, துருக்கி மக்களுடன் இலங்கை அரசாங்கமும் மக்களும் கொண்டுள்ள ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கையின் சில தனியார் ஆடைத் தொழிற்சாலைகள் இந்த உதவிக்கு தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளன.
கடந்த பெப்ரவரி மாதம் துருக்கியில் நிலஅதிர்வு ஏற்பட்டதை அடுத்து இலங்கை ஒரு தொகை தேயிலையை அனுப்பியிருந்தமையம் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து தேர்தல் ஆணையம் கவலை

நாட்டு மக்களுக்காக ஜனாதிபதியின் மேலும் பல நிவாரண உதவிகள்

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவிற்கு புதிய பொறுப்பு