உள்நாடு

சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானங்கள் போக்குவரத்தில் மற்றம்

(UTV | கொழும்பு) –  சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானங்கள் போக்குவரத்தில் மற்றம்

சீரற்ற காலநிலைக்காரரானமாக நேற்று (07) மாலை 6.25 மணியளவில் துபாய்க்கு செல்லவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் U.L. 225 என்ற விமானம் சுமார் 15 மணி நேர தாமதத்திற்குப் பிறகு காலை 9.15 மணியளவில் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவு சுமார் 7.15 மணியளவில் ஜப்பானின் நரிட்டா நகருக்குச் செல்லவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் U.L. 454 என்ற விமானம் இன்று அதிகாலை 1.50 மணிக்கு புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நேற்று இரவு 11.40 மணியளவில் இந்தியாவின் மும்பைக்கு செல்லவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவையின் U.L. 141 விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், மும்பையிலிருந்து இன்று காலை 05.35க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருந்த விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து நேற்று இரவு 07.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த சைனா ஈஸ்டன் ஏர்லைன்ஸ் விமானம் MU-231, கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றி பெய்த கடும் மழை காரணமாக மாலைதீவின் மாலே விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

நேற்று மாலை 06.10க்கு குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-230 தாமதமாகி இன்று காலை 07.33க்கு மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இரசாயன தேங்காய் எண்ணெய் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க CID குழு

அரசியல் பழிவாங்கலை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் – அப்துல்லாஹ் மஹ்ரூப்

இன்றும் 157 பேர் நோயில் இருந்து மீண்டனர்