(UTV | கொழும்பு) – பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மேலும் 04 பேர் கைது
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹங்வெல்ல பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கடந்த 24 ஆம் திகதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இருந்த போது தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த நபர் தப்பச் செல்ல தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தமை, தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தமை, உணவு பான வசதிகளை வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபர்கள கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் கட்டுவெல்லேகம, நீர்கொழும்பு மற்றும் மினுவாங்கொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர சந்தேகநபர்கள் பயன்படுத்திய 02 கார்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්