உள்நாடு

விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்ப பட்ட  மஹிந்தானந்த அளுத்கமகே தொடர்பில் விசாரணை

(UTV | கொழும்பு) –  விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்ப பட்ட  மஹிந்தானந்த அளுத்கமகே தொடர்பில் விசாரணை

வெளிநாட்டு பயணம் ஒன்றிற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவை மீண்டும் திருப்பி அனுப்பியமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரின் கடவுச்சீட்டு தரவுகளுடன் தொடர்புடைய வேறு ஒருவரின் தரவுகள் உள்ளடக்கப்பட்டமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த தகவல்களை கணினியில் உள்ளீடு செய்த அதிகாரியின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் இலங்கை கணினி அவசர பதில் பிரிவு என்பன விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

மத்திய மலையக பகுதிகளில் தொடரும் வரட்ச்சி

குருநாகல் நகர மேயர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்யுமாறு உத்தரவு