(UTV | கொழும்பு) – இன்று திட்டமிடப்பட்ட பல ரயில் பயணங்கள் ரத்து!
இன்று (13) திட்டமியோடப்பட்டிருந்த அலுவலக ரயில்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான ரயில் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரயில் இயந்திர சாரதிகள் தொழிற்சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இவ்வாறு ரயில் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹவயிலிருந்து கொழும்பு மற்றும் மொரட்டுவை வரை பிரதான ரயில் வீதியில் இயங்கும் அலுவலக ரயில்கள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, பிரதான வீதியில் இயக்கப்படும் பல அலுவலக ரயில்களும் இன்று காலை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கரையோர ரயில் வீதியிலும் பல அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன்,
(காலியில் இருந்து மருதானை நோக்கிச் செல்லும் சமுத்திராதேவி ரயில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.)
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්