உள்நாடு

இலங்கையில் நிலநடுக்கம் ஏற்பட இதுதான் கரணம்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் நிலநடுக்கம் ஏற்பட இதுதான் கரணம்

புத்தலை பகுதியில் உணரப்பட்ட நிலநடுக்கம் இந்திய – அவுஸ்திரேலிய கவசத்தகடு வெடிப்பின் காரணமாகவே ஏற்பட்டதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்திய – அவுஸ்திரேலிய கவசத்தகடு நடுவே நடைபெற்றுள்ள இந்த வெடிப்பு,
கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக மிக வேகமாக இடம்பெற்று வருவதாகவும்,
வெடிப்பு ஏற்படும் இடத்திற்கு மிக அருகில் உள்ள நாடு இலங்கை என்பதால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற சிறிய நிலநடுக்கங்கள் தொடர்ந்து உணரப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த சிறிய நிலநடுக்கத்திற்கு மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும்,
இலங்கையிலிருந்து சுமார் 1,000 மைல் தொலைவில் உள்ள இந்த கவசத்தகடு உடைவதால்,
எதிர்காலத்தில் ரிச்டர் அளவுகோளில் மேலும் பல நிலநடுக்கங்கள் பதிவாகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

டொலரில் இன்றைய நிலவரம்

பாராளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று முக்கிய கலந்துரையாடல்