உள்நாடு

முட்டை இறக்குமதி தொடர்பான புதிய தகவல்

(UTV | கொழும்பு) – முட்டை இறக்குமதி தொடர்பான புதிய தகவல்

முட்டை இறக்குமதி தொடர்பான இந்திய வழங்குனர்களால் வழங்கப்படவுள்ள அறிக்கைகள் இன்று (04) கிடைக்கப்படும், உரிய அறிக்கைகள் கிடைத்தவுடன் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறைக்கு அறிக்கைகள் அனுப்பி வைக்கப்படும் என அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

டெண்டர் நடைமுறையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட இரண்டு இந்திய விநியோகஸ்தர்களுக்கும் இன்றைய தினத்திற்குள் உரிய அறிக்கைகளை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்,

மேலும், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை ஒப்புதல் அளித்தவுடன், முட்டை இறக்குமதி செய்யும் பணியை உடனடியாக தொடங்கலாம் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இதுவரையில் 3,043 பேர் தொற்றில் இருந்து மீண்டனர்

தபால் ஊழியர்களும் பணி பகிஷ்கரிப்பு!

எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

editor