(UTV | உலகம் ) – ஒடுக்குமுறை அனுபவிப்பவர்களுக்கு கனடா அடைக்கலம்!
சீனாவில் இருந்து வெளியேறிய 10,000 உய்குர் அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதற்கான பிரேரணை கனடா நாடாளுமன்றம் புதன்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2021 பெப்ரவரி மாதம் இது தொடர்பில் முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளனர்.
இதன்படியே, சீனா முன்னெடுப்பது இன அழிப்பு என கனடா நிர்வாகம் அடையாளப்படுத்தியது.
சீனாவில் உய்குர் மற்றும் துருக்கிய இஸ்லாமியர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் ஒடுக்குமுறைகள் இன அழிப்பு என்றே கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அடையாளப்படுத்தி வருகிறது.
சீனாவில் உய்குர் மக்கள் உட்பட பிற இஸ்லாமிய சிறுபான்மையினர் சுமார் 1 மில்லியன் மக்கள் Xinjiang பகுதியில் உள்ள தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவை மட்டுமல்லாது, சிறுபான்மை இனப் பெண்களை வலுக்கட்டாயமாக கருத்தடை செய்வதாகவும், கட்டாய உழைப்பை திணிப்பதாகவும் சீனா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுவரை சீனாவின் ஒடுக்குமுறைக்கு அஞ்சி பல ஆயிரம் மக்கள் வெளியேறியுள்ளனர். மேலும், சீன ஆதரவு நாடுகளில் தஞ்சம் புகுந்த மக்கள் சுமார் 1600 பேர்கள் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் நாடுகடத்தப்படும் கட்டாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 2024 முதல் கனடாவில் உய்குர் மக்கள் 10,000 பேர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் பிரேரணை ஒன்றை கனடா நாடாளுமன்றம் புதன்கிழமை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්