உள்நாடு

one day passport ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெறுபவர்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  (passport ) கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

(one day passport ) ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி தேசிய அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் பெற்று பண மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு, தலங்கம பொலிஸாருக்கு கிடைத்த 3 முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அதன்படி நேற்று (31) சந்தேகநபர்கள் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, சந்தேகநபர்களிடம் முறைப்பாடு செய்த இருவரின் தேசிய அடையாள அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த முறைப்பாடு ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொரலஸ்கமுவ பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டதுடன், சந்தேகநபரிடம் இருந்து தேசிய அடையாள அட்டை, 15,000 ரூபா மற்றும் 9 போலி கடவுச்சீட்டில் தயாரிக்கப்பட்ட டோக்கன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

(மக்கள் இவ்வாறு போலியானவர்களிடம் ஏமாற வேண்டாம்… அவதானமாக இருக்கவும்..)

இதன் போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 47 மற்றும் 65 வயதுடைய மாலம்பே மற்றும் கொழும்பு 9 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (01)  சந்தேக நபர்கள் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எதிர்வரும் 11ம் திகதி முதல் ஊழியர்களுக்கு விஷேட போக்குவரத்து சேவைகள்

நாளை மறுநாள் முதல் அரசு அலுவலகங்கள் வழமை போல் செயல்படும்

கர்ப்பிணி தாய்மாருக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி