(UTV | சிலாபம்) – சிலாபத்தில் வீட்டிற்குள் புகுந்த கீரி கடித்ததில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
உயிரிழந்த நபரின் வீட்டிற்குள் புகுந்த கீரி ஒன்றை விரட்ட முற்பட்ட போது, குறித்த கீரி அவரது கால் விரலை கடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 39 வயதுடைய மாவில, நாத்தாண்டிய பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්