உள்நாடு

பத்துளுஓயாவில் வீழ்ந்தது எரிபொருள் பவுஸர்

(UTV | ஆனவிழுந்தாவை) –பத்துளுஓயாவில் வீழ்ந்தது எரிபொருள் பவுஸர்

பத்துளு ஓயாவின் பாதுகாப்பு பக்கச் சுவர்களை உடைத்துக் கொண்டு எரிபொருள் பவுஸர் ஒன்று பத்துளுஓயாவில் வீழ்ந்து சுமார் 100 மீற்றர் தூரம் வரை கொண்டு செல்லப்பட்டு ரயில்வே பாலத்துக்கு அருகில் வந்து நின்றதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த எரிபொருள் பவுஸர் புத்தளம்- கொழும்பு வீதியில் ஆனவிழுந்தாவைக்கு அருகில் உள்ள பத்துளு ஓயாபாலத்தின் பாதுகாப்பு பக்க சுவர்களை உடைத்து பத்துளு ஓயாவில் வீழ்ந்துள்ளது

குறித்த பிரதேசத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பத்துளுஓயாவில் நீர் மட்டம் உயர்வினால் குறித்த பவுஸர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு சுமார் 100 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பத்துளு ஓயா ரயில்வே பாலத்தின் கீழ் நின்றுள்ளது.


பாலத்தில் மோதியதால் எரிபொருள் பவுஸரின் சாரதி, driver சீட் இலிருந்து இறங்கி அதன் மேல் பகுதியில் ஏறி நின்று காப்பாற்றுமாறு சத்தமிட்டுள்ளார்.
இதனையடுத்து முந்தல் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து சாரதியை மீட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

‘இடுகம’ நிதியத்தின் மீதி 1128 மில்லியனாக அதிகரிப்பு [PHOTOS]

குறைந்த வருமான பெறுபவர்களுக்கு சலுகை வழங்கத் திட்டம்

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை