(UTV | கொழும்பு) – நாளை (21) கொழும்பின் சில பகுதிகளில் 09 மணி நேர நீர் வெட்டு!
மின்சார சபையினால் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் புறநகர் பகுதிகளில் நாளை 09 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கடுவெல மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் மஹரகம, போரலஸ்கமுவ, கொலொன்னவா நகர சபை பகுதிகள், கோட்டிக்காவத்தை- முல்லேரியபிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகள் இரத்மலானை மற்றும் கட்டுப்பெத்தை ஆகிய பிரதேசங்களுக்கே இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
இவ்வாறு நீர் விநியோகம் நாளை(21) காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை வீர் வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්