(UTV | கொழும்பு) – வேறு வழி இல்லாமல் நாடு திரும்பினார் கோட்டாபய
தனியப்பட்ட விஜயமாக டுபாய் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குழுவினர் அவர்களது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் செல்லும் நம்பிக்கையுடன் அண்மையில் நாட்டிலிருந்து சென்றிருந்தவர் மீண்டும் இலங்கை வந்துள்ளார்.
கோட்டாபயவுடன் , அவரது மனைவி அயோம ராஜபக்ஷ, பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார மற்றும் மற்றுமொரு நபர் வந்துள்ளதாகவும், அவருடன் சென்ற ஜனாதிபதியின் மகன் மனோஜ் ராஜபக்ஷ, அவரது மனைவி மற்றும் குழந்தை வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமிரேட்ஸ் விமானமான EK 605 இல் வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி, சிறப்பு விருந்தினர் முனையம் ஊடாக வெளியேறியதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
.கடந்த டிசம்பர் மாதம் 25 ம் திகதி துபாய் சென்ற அவர் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்ல விசா கோரியதாகவும்,அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுக்க விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல்கல் வெளியாகின.
டுபாயில் இருந்து பெறக்கூடிய இராஜதந்திர சலுகைகளை பெற முயற்சித்ததாகவும், டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சிறப்பு விருந்தினர் ஓய்வறையை பணம் செலுத்தாமல் பயன்படுத்துமாறு அவர் விடுத்த கோரிக்கை அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் டுபாயில் ஹோட்டல் ஒன்றில் தங்கி ஓய்வெடுத்த முன்னாள் ஜனாதிபதி இன்று இலங்கை திரும்பியுள்ளார்.
(இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துபாயின் தனியார் ஃபேம் பார்க் பூங்காவில் அதன் உரிமையாளர் சைஃப் அஹமட் பெல்ஹாசா மற்றும் பல விலங்குகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.)
(ஃபேம் பார்க் என்பது ஐக்கிய அரபு இராச்சிய தொழிலதிபர் சைஃப் அஹ்மத் பெல்ஹாசாவுக்கு சொந்தமான ஒரு கவர்ச்சியான விலங்குப்பண்ணையாகும்.
அங்கு கோட்டாபய ராஜபக்ஷ எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது).
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්