உள்நாடு

தபால் மூலம் வாக்களிக்கும் விண்ணப்பங்களை ஒன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்

(UTV | கொழும்பு) – தபால் மூலம் வாக்களிக்கும் விண்ணப்பங்களை ஒன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நாளை ஆரம்பமாகவுள்ளது.

இவ்வாறு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது 2023 ஜனவரி 23 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடையும் என தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கால அவகாசம் நீடிக்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்
✔அரச ஊழியர்கள், ✔அதிபர்கள், ✔ஆசிரியர்கள், ✔இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரிகள், ✔ தபால் மற்றும் ✔ புகையிரத ஊழியர்கள், ✔ பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய
✔ பாதுகாப்புப் படையினர்

விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு www.elections.gov.lk அல்லது 1919ஐ தொடர்பு கொண்டு சேவையினை பெற்றுக்கொள்ள முடியம்.

இதன் படி, தபால் மூல வாக்களிக்கும் விண்ணப்பங்களை ஒன்லைனிலும் சமர்ப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கஞ்சா தொடர்பில் புதிய தீர்மானம்

உள்ளூராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்படும்

கொழும்பிற்கு 10 மணித்தியால நீர் வெட்டு