(UTV | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் குறைகிறது அதிவேக நெடுஞ்சாலை பஸ் கட்டணம்
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிவேக நெடுஞ்சாலை பஸ் கட்டணம் 10 சதவீதத்தினால் குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடக அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன், சாதாரண பேருந்து கட்டணத்தை குறைக்க வாய்ப்பில்லை என்று பேருந்து உரிமையாளர் சங்கங்கள் தெரிவித்திருந்தன.
பஸ் கட்டணத்தை குறைக்கும் அளவுக்கு எரிபொருள் குறைப்பு இல்லை என்றும், பேருந்து கட்டணம் குறித்து கலந்துரையாடுவதற்கு குறைந்தது 4 சதவீதத்தினாலாவது எரிபொருள் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று குறித்த சங்கங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්