உள்நாடு

காஞ்சனவுக்கு எதிராக மின்சார சபையின் பொறியியலாளர்கள்

(UTV | கொழும்பு) –  காஞ்சனவுக்கு எதிராக மின்சார சபையின் பொறியியலாளர்கள்

அனைவருக்கும் நியாயமாக பணியாற்றக்கூடிய ஒருவரை மின்சாரத்துறை அமைச்சரை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன இன்று (3) தெரிவித்துள்ளார்.
அமைச்சர் காஞ்சனவால் சட்டத்திற்கு முரணாக அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட மின் கட்டண உயர்வு பிரேரணையை குப்பைத் தொட்டியில் வீசுமாறு கோருவதாகவும் மின்சாரச் சட்டத்தையும் சுயாதீன ஆணைக்குழுக்களையும் புறக்கணித்து அமைச்சரினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட மின் கட்டண உயர்வு யோசனை மின்சார சபையில் தொழிற்சங்கங்கள் உட்பட பலரது ஆட்சேபனை காரணமாக ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நிஹால் வீரரத்ன தெரிவித்தார்.
அதனை மீண்டும் அமல்படுத்த முயற்சித்தால், தொழிற்சங்கங்கள் மீண்டும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டத்தை மீறி கொள்கையொன்று கொண்டுவரப்பட்டு மக்களால் சுமக்க முடியாத மின்சாரக் கட்டண முறை முன்வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சுகாதார விதிமுறைகளை மீறிய 62 பேர் கைது

ஐ.ம. சக்தியின் பாராளுமன்ற  குழு கூட்டம் இன்று

ஜா-எல, கனுவன சந்தி ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகை