உள்நாடு

 சட்டவிரோதமாக மருந்து கொண்டு வரப்பட்டுள்ளது

(UTV | கொழும்பு) –  சட்டவிரோதமாக மருந்து கொண்டு வரப்பட்டுள்ளது

பெருந்தொகையான மருந்துப்பொருட்கள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு ஏனைய பிரதேசங்களுக்கு பகிர்வதற்கு முற்பட்டவேளையில் குறிப்பிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டதாக தேசிய ஒளடத ஒழுங்கமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
புறக்கோட்டையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே
இந்த அதிகார சபையைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த மருந்து தொகைஇணை கைப்பற்றியது. இந்த மருந்துத் தொகையின் பெறுமதி ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, துருக்கி, இத்தாலி உட்பட பல நாடுகளிலிருந்து இந்த மருந்து வகைகள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டுள்ளன என்பது ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் தற்சமயம் விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அதிகார சபையின் உணவு மற்றும் மருந்து பரிபாலன அதிகாரி அமித் பெரேரா தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சீனாவில் திட்டங்களை சீனாவுக்கு கொடுப்பதா இல்லையா?

மியன்மாரிலிருந்து 20,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்

ஜனக ரத்நாயக்கவின் அலுவலகத்திற்கு சீல்