உள்நாடு

நாட்டிலுள்ள 50 வீதமான உணவகங்கள் மூடப்படும் அபாயம்

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் காலங்களில் நாட்டிலுள்ள 50 வீதமான உணவகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் நாட்களில் அரசு மற்றும் அரசு சார்பற்ற உணவகங்கள் பாதி மூடப்படுவதாக குறித்த சங்கத்தின் தலைவர்
அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைவாக பணப்பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான ஊழியர்கள் தமது வருமானத்தை 75 வீதத்தால் குறைத்துள்ளதாக சுட்டிக்காட்டிய தலைவர், இதனால் பல உணவகங்களை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பணப்பற்றாக்குறை மற்றும் உணவு விலை உயர்வு காரணமாக பல தொழிலாளர்கள் வீட்டில் இருந்து கப்பம், அரிசி கொண்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாடசாலைகள் மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பம்

நாளை ரயில் சேவைகள் இடம்பெறாது

 ஒரு குரங்கை 50,000 அல்லது 75,000 கொடுத்து சாப்பிட அந்த மக்களுக்கு என்ன பைத்தியமா? – அமர வீர