(UTV | கொழும்பு) – மரக்கறிகளை ஏற்றிச்செல்ல சிறப்பு ரயில் சேவை
ரணில் விக்ரமசிங்க முனவைத்த யோசனைக்கு அமைவாக 23 வருடங்களுக்கு பின் மீண்டும் ரயில் மூலமாக மரக்கறிகளை கொழும்பு கோட்டை க்கான மரக்கறி போக்குவரத்து நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நானு ஓயாவிலிருந்து கொழும்பு கோட்டை க்கான மரக்கறி தாங்கிய ரயில் நேற்றிரவு 12 மணிக்கு கோட்டையை வந்தடைந்தது.
இந்த மரக்கறி போக்குவரத்துக்காக ரயில்வே திணைக்களத்தின் வர்த்தக மற்றும் விற்பனை பிரிவினால் 05 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கொண்டுவரப்பட்ட மரக்கறிகள் மெனிக் சந்தை மற்றும் சிறப்பு சந்தைகளுக்கும் விநியோகப்படவுள்ளன.
மேலும் இந்த ரயிலில் பொதுப்பயணிகள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
( மலையகப் பகுதிகளில் பயிரிடப்படும் காய்கறிகள், பூக்கள் மற்றும் பழங்கள் இந்த சிறப்பு ரயிலில் கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நுவரெலியாவைத் தவிர, பண்டாரவளை மற்றும் வெலிமடை பகுதிகளில் பயிரிடப்படும் மரக்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள் கொண்டு செல்லப்படுவதோடு, நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து அனைத்து ரயில் நிலையங்களுக்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் போக்குவரத்துக்காக விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா வரை புகையிரதம் இயங்கும் போது உணவுப் பொருட்களும் எடுத்துச் செல்லப்படும் என நிலைய அதிபர் மேலும் தெரிவித்தார்.)
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්