உள்நாடு

இறக்கும் முன் மாமியாருக்கு கடிதம்- தினேஷ் ஷாஃப்டரின் மரணத்தில் புதிய திருப்பம்.

(UTV | கொழும்பு) –  இறக்கும் முன் மாமியாருக்கு கடிதம்-
தினேஷ் ஷாஃப்டரின் மரணத்தில் புதிய திருப்பம்.

ஜனசக்தி குழும தகலைவர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பாக கிடைத்து வரும் தகவல்கள் மற்றும் சில ஆதாரங்களால் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அவரது மரணத்தின் போது கழுத்தில் கட்டப்பட்ட கம்பியைப் போன்ற ஒரு கம்பியை பொலிஸார் அவரது வீட்டில் கண்டெடுத்துள்ளனர் . மேலும், ஷாஃப்டரின் கைகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டிருந்த சில கேபிள் இணைப்புகள் அவரது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஷாஃப்டர் தற்கொலை செய்து கொண்டாரா? என்றும் விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர், ஆனால் ஷாஃப்டரின் மரணம் குறித்த பிரேத பரிசோதனையின் படி, வயர் கேபிளால் கழுத்தை நெரித்ததால் மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு ஷாஃப்ட்டர் தனது மாமியாருக்கு எழுதியதாகக் கூறப்படும் கடிதங்கள் குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர், மேலும் அதில் உணர்ச்சிகரமான கருத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது.

“இவ்வளவு நல்ல மகளை வளர்த்ததற்கு மிக்க நன்றி” என்று அவர் மாமியாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

மேலும், ஷாஃப்டர் தான் வசித்து வந்த ப்ளவர் வீதியில் உள்ள தனது வீட்டை விற்பதற்காக நாளிதழ் ஒன்றில் விளம்பரம் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் ஷாஃப்டர் பல்வேறு வணிக முயற்சிகளில் மில்லியன் கணக்கான ரூபாய்களை முதலீடு செய்த பின்னர் பணத்தை திரும்பப் பெறத் தவறியதால் பல இழப்புகளைச் சந்தித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது கொலையா அல்லது தற்கொலையா என்பதை விசாரணைகள் முடிவு செய்யவில்லை எனவும், சம்பவம் தொடர்பாக ஒவ்வொரு கோணத்திலும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார் .
இதுவரை ,70 பேர் விசாரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரபல சிங்கள அரசியல்வாதியால் பறிபோன இளைஞனின் உயிர்!

உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டிருந்த பகுதிகள் வழமைக்கு

சீன வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கைக்கு விஜயம்