உள்நாடு

நத்தாரை முன்னிட்டு சிறப்பு புகையிரத சேவை

(UTV | கொழும்பு) –  நத்தாரை முன்னிட்டு சிறப்பு புகையிரத சேவை

நத்தார் பண்டிகையை முன்னிட்டு 08 சிறப்பு புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக புகையிரத துணைப் பொது மேலாளர் ஏ. டி. ஜி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சிறப்பு புகையிரத சேவை நாளை முதல் அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ✔ பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை 03 சிறப்பு புகையிரதங்களும், ✔ கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை 3 சிறப்பு புகையிரதங்களும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது, ✔ கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறைக்கு ஒரு சிறப்பு புகையிரதமும், ✔ காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு ஒரு சிறப்பு புகையிரதமும் இணைக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சில அலுவலக ரயில்கள் மாத்திரம் சேவையில்

MT New Diamond கப்பலின் கெப்டனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

அனைத்து பல்கலைக்கழகங்களும் திறப்பு