உள்நாடு

 கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) –  கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்க நடவடிக்கை

நத்தார் தினத்தை முன்னிட்டு, கிறிஸ்தவ தேவாலயங்களில் நடத்தப்படும் விசேட திருப்பலி ஒப்புக்கொடுத்தல் ஆராதனைகளின் போது, தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்புக்களை வழங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பொலிஸ்மா அதிபர், அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் நாட்டிலுள்ள அனைத்து அருத்தந்தைகளையும் சந்தித்து, கலந்துரையாடி அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதுமட்டுமல்லாது, நத்தார் காலப் பகுதியில் தேவாலயங்களில் உள்ளவர்களின் ஒத்துழைப்புடன், தேவாலயத்திற்கு வருகைத் தரும் சந்தேகத்துக்குரியவர்களை அடையாளம் காணப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாடாளுமன்றத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் : சிக்கிய மேலும் சிலர்

சில தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

நுவான் துஷாரவுக்கு கொவிட் உறுதி