(UTV | கொழும்பு) – டயானா கமகேவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இராஜதந்திர கடவுச் சீட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரி இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓசல ஹேரத் என்ற சமூக செயற்பாட்டாளரான என்பவரே இந்த முறைப்பாட்டை இன்று (20) ஆணைக்குழுவிடம் வழங்கியுள்ளார்.
டயனா கமகே பிரித்தானிய பிரஜையாக கருதப்படும் நிலையில், அவருக்கு குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தினால் இராஜதந்திர கடவுச் சீட்டு வழங்கப்பட்டிருப்பின் அது குடிவரவு- குடியகல்வு திணைக்கள சட்டவிதிகளுக்கு முரணானது என குறித்த சமூக செயற்பாட்டாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්