(UTV | கொழும்பு) – வருமானம் குறைந்தவர்களுக்கு ஜப்பான் நிதிஉதவி
நாட்டிலுள்ள கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக அத்தியாவசிய போஷாக்கு பொதிகளை கொள்வனவு செய்வதற்கு ஜப்பான் அரசாங்கம் மேலும் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவியை வழங்கியுள்ளது.
அதாவது, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் ஊட்டச்சத்து தேவைகளை ஆதரிக்கவும், அவர்களின் வாழ்வாதார சூழ்நிலைகளை மேம்படுத்தவும், அவர்களின் குடிநீர், சுகாதாரம் மற்றும் சுகாதார பிரச்சினைகளை நிர்வகிப்பதற்கும், குறிப்பாக பெண் பாடசாலைகளின் மாதவிடாய் சுகாதார பிரச்சினைகளை நிர்வகிப்பதற்கும் இது அனைத்து மாகாணங்களிலும் வாழும் மொத்தம் 76,000 மக்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலன்னாவ பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் அரசாங்க அதிகாரிகளால் கொள்வனவு செய்யப்பட்ட போசாக்கு பொதிகளை உள்ளூர் மக்களுக்கு வழங்கும் நிகழ்வில் தூதுவர் ஹிடேக்கி மிசுகோஷி அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්