(UTV | கொழும்பு) – தாமரை கோபுரத்தை பார்வையிட வருபவர்களுக்கான அறிய வாய்ப்பு!
சுற்றுலா அமைச்சு , ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் இணைந்து
“கிறிஸ்துமஸ் கொழும்பு – தாமரை கோபுரம்”
என்ற நிகழ்வை கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ளது.
டிசம்பர் 20 முதல் 28 ஆம் திகதி வரை இந்நிகழ்வு இடம் பெரும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Five Star Hotel )ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் உணவு சந்தை , குளிர்பானக் கடைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் , இசைக்குழுக்களின் இசை நிகழ்ச்சிகள் , டிஜேக்கள் மற்றும் குழந்தைகளுக்கான அரங்கம் ஆகிய அம்சங்களைக் கொண்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியானது அனைத்து பார்வையாளர்களுக்கும் ஒரே வளாகத்தில் பல இடங்களைக் கொண்டு முற்றிலும் மாறுபட்ட தனித்துவமான அனுபவமாக இருக்கும். “கிறிஸ்துமஸ் கொழும்பு”
இந்நிகழ்விற்கு நுழைவு இலவசம் மற்றும் தாமரை கோபுரத்தை பார்வையிடும் எவரும் நிகழ்விற்கு இலவச அனுமதியை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை நிகழ்ச்சிக்கான இசைக்குழு வரிசை பின்வருமாறு:
டிசம்பர் 20 – மிஸ்டி
டிசம்பர் 21 – foot print
டிசம்பர் 22 -கடற்படை மற்றும் இராணுவம்
டிசம்பர் 23 – குரும்பா
டிசம்பர் 24 -விமானப்படை
டிசம்பர் 25 – பொலிஸ்
டிசம்பர் 26 – பில்லி பெர்னாண்டோ
டிசம்பர் 27 – ரொமேஷ்
டிசம்பர் 28 – லைன் ஒன்
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්