உள்நாடு

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான மனுக்கள் விசாரணைக்கு …

(UTV | கொழும்பு) –   உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடாத்துவதற்குஆணை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு உட்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன் படி பிரியந்த ஜயவர்தன, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வில் குறித்த மனுக்கள் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுக்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, லக்ஷ்மன் கிரியெல்ல, எம். ஏ.சுமந்திரன், ரஞ்சித் மத்திம பண்டார முதலானோர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஆணை பிறப்பிக்குமாறு கோரி இரண்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மினுவாங்கொடை தொழிற்சாலையின் மேலும் 139 பேருக்கு கொரோனா

அவசர காலநிலை நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் பூரண குணமடைந்துள்ளனர்