உள்நாடு

பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

(UTV | மட்டக்களப்பு) –  மட்டக்களப்பு பகுதியில் 3 பொலிஸ் நிலையப் பிரிவுகளில் உள்ள பல வீடுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த இரு சந்தேகநபர்கள் தொடர்பான காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

இதன்படி, இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திலோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அறிவிக்குமாறு மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

கடந்த அக்டோபர் (29) திகதி மட்டு. தலைமையகம், காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி போன்ற பகுதிகளில் 4 வீடுகளில் 28 பவுண் தங்க ஆபரணங்களும் 2 இலட்சத்து 83 ஆயிரம் ரூபா பணம், மடிக்கணணி, மணிக்கூடு போன்ற பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சி.சி.டி.வி. கமராவில் பதிவாகியுள்ளவர்களை பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன், புகைப்படத்தையும் வெளியிட்டு பொது மக்களிடம் உதவி கோரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் இன்று விவாதம்

அரச சேவையை ஒன்லைனுக்கு மாற்றுவதே ஊழலுக்கு எதிரான சிறந்த தீர்வு – ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலத் நசீர் அல்மேரி

editor

பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்