உள்நாடு

ஹுனுபிட்டிய கங்காராமய ஆலயம் வழிபாட்டு தலமாக பிரகடனம்

(UTV | கொழும்பு) –  ஹுனுபிட்டிய கங்காராமய ஆலயம் வழிபாட்டு தலமாக பிரகடனம்

ஹுனுபிட்டிய கங்காராமய ஆலயத்தை வழிபாட்டு தலமாக அபிவிருத்தி செய்வதற்கான பிரகடனத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார்

வரலாற்றுச் சிறப்புமிக்க ஹுனுப்பிட்டி கங்காராமய விகாரையை வழிபாட்டுத் தலமாக அபிவிருத்தி செய்வதற்கான பிரகடனத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஹுனுப்பிட்டி கங்காராமய விகாரையின் பிரதம அதிதியான கலபொட ஞானிஸ்ஸர நாயக்க தேரரிடம் கையளித்துள்ளனர்.

பிரதமகுரு கலபொட ஞானிஸ்ஸர நாயக்க தேரரின் ஜனன தினத்தை முன்னிட்டு இன்று (14) காலை கங்காராமய விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்களின் சுகபோகங்களை கேட்டறிந்து,

பின்னர் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பௌத்த பக்தர்களால் பெரிதும் போற்றப்படும் ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் அபிவிருத்தி தொடர்பான பிரகடன ஆவணத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டு, அதனை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கும் வகையில் வழிபாட்டு தலமாக பிரகடனம் செய்துள்ளார்.

கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரர் தலைமையில் மகா சங்கத்தினர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பந்துல குணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா, ஜனாதிபதியின் காலநிலை மாற்ற ஆலோசகர் ருவான் விஜேவர்தன, உபாலி குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நிமல். வெல்கம உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

2024 – வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்று.

எரோல் வன பாதுகாப்பு பகுதியில் காட்டுத்தீ