உள்நாடு

ஒருவரை கடத்தி ஒரு கோடி கேட்டவர் கைது

(UTV | காத்தான்குடி ) –  நபர் ஒருவரை கடத்திச்சென்று பணம் கேட்டு மிரட்டியவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஒருவரை கடத்திச் சென்று ஒரு கோடி ரூபா கப்பம் கோரியமை தொடர்பில் காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனடிப்படையில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் கடத்தலை மேற்கொண்ட சந்தேக நபர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் எனவும், சந்தேக நபர் இன்று (11) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கந்தன்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மோட்டார் வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் கடற்படை

அறுகம் குடாவிலிருந்து இஸ்ரேலியர்கள் உடனடியாக வெளியேறவேண்டும்

editor