உள்நாடு

மலையக ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளது.

(UTV | பதுளை) –     தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக நானுஓயா ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

 

பதுளையிலிருந்து கொழும்பு புகையிரத நிலையத்தை நோக்கி சென்ற தபால் புகையிரதம் நேற்று (07) இரவு நானுஓயா மற்றும் கிரேட்வெஸ்டன் ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் 124/½வது மைல் கல் இடத்தில் வைத்து தடம்புரண்டுள்ளமையால் மலையகத்திற்கான புகையிரத சேவை பாதிப்படைந்தது.

குறித்த புகையிரதத்தின் பெட்டி ஒன்று தடம்புரண்டதன் காரணமாகவே மலையகத்திற்கான புகையிரத சேவை பாதிக்கப்பட்டிருந்தது.

எனினும், இன்று (08) காலை 8 மணியளவில் ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளதுடன், ரயில்கள் வழமைப் போன்று சேவையில் ஈடுபடுவதாகவும் நானுஓயா ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது

 

Related posts

இன்றே UTV NEWS ALERT இனை செயற்படுத்த..

ஊரடங்குச் சட்டம் தொடர்பிலான விசேட அறிவித்தல்

இரு தினங்கள் அரச விடுமுறை நாட்களாக அறிவிப்பு