உள்நாடு

பாடசாலை செல்லும் மாணவிகளின் பெற்றோர்கள் கவனத்திட்கு!

(UTV | கொழும்பு) –  பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி மாணவிகளும் போதை வஸ்திற்கு அடிமையாகி சிகிச்சை பெற வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பழக்கம் முன்னர் நகர்ப்புற பாடசாலைகளில் மாத்திரம் பதிவாகியிருந்த போதிலும், தற்போது அது கிராமப்புற பாடசாலைகளுக்கும் பரவியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பாவனையால் 13,000 க்கும் மேற்பட்ட சிறுவர்கள்,  சிறுவர் இல்லங்களில் தங்கியிருப்பதாகவும் அவர்களில் பலர் துஷ்பிரயோக சம்பவங்கள் காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாடசாலை மாணவர்களின் போதைப்பொருளுக்கு அடிமையாகும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதனைத் தடுப்பதற்கு வலையமைப்புத் திட்டமொன்று தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் “இந்த குழந்தைகளை காப்பாற்ற நாம் போராட வேண்டும். இல்லையென்றால் நமக்கு நாடு என்று ஒன்று இருக்காது.” எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகளுக்கான அறிவிப்பு

நிரந்தர அதிகாரப் பகிர்வு பொறிமுறையை இலங்கை இன்னமும் கண்டுபிடிக்கவில்லை

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு