உள்நாடு

  பத்து மாதங்களில் இரண்டரை லட்சம் பேர் வெளிநாடு சென்றுள்ளனர்

(UTV | கொழும்பு) –     பத்து மாதங்களில் இரண்டரை லட்சம் பேர் வெளிநாடு சென்றுள்ளனர்

 

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
✔ 2022 ஜனவரி – ஒக்டோபர் காலப்பகுதியில் 251,151 பேர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.

கொவிட் தொற்று தொடங்குவதற்கு முன்னர் வருடாந்தம் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கையில் இது பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்தியவங்கி தெரிவித்துள்ளது.

இதேவேளை,
✔ 2022 ஒக்டோபர் மாதத்தில் 28,473 பேர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
✔ இவர்களில் 11,399 திறனற்ற தொழிலாளர்கள்,
✔ 7,887 பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் மற்றும்
✔ 6,165 பேர் உள்நாட்டு சேவைகளுக்காக சென்றுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் பதிவாகியுள்ள வெளிநாட்டுப் பணம் 355 மில்லியன் டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2022 ஜனவரி தொடக்கம் அக்டோபர் இல் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணம் 2,929 மில்லியன் டொலர்கள். 2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில், இந்த மதிப்பு 4,895 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

டெலிகொம் தலைவர் நீக்கம்!

72 தொழிற்சங்கங்கள் பணி பகிஷ்கரிப்பு!

புதிதாக 49 பேருக்கு கொரோனா