உள்நாடு

மாகாண சபையை ஜனாதிபதி கலைக்கவுள்ளதாக வெளிவந்த செய்தி உண்மைக்கு புறம்பானது – ஜனாதிபதி ஊடகப்பிரிவு

(UTV | கொழும்பு) –     மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை ஸ்தாபிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்த பதில், அர்த்தத்தை சிதைக்கும் விதத்தில் பல ஊடகங்களில் செய்திகளாக வெளியாகியுள்ளதாக அப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும்,நேற்று 2023ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில், பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மாகாண சபைகளில் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை ஸ்தாபிக்கத் தயார் எனத் தெரிவித்திருந்த போதிலும் . மாகாண சபைகள் கலைப்பு தொடர்பில் ஜனாதிபதி எந்த கருத்தையும் வெளியிடவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, நிறைவேற்றுத் தீர்மானங்களை அமுல்படுத்துவதில் அரசாங்கம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இடையில் சரியான ஒருங்கிணைப்பைப் பேணுவதற்கான களமாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் செயற்படும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாகும் என தெரிவித்துள்ளது.

அதன் மூலம், வளர்ச்சிப் பணிகள் முறையாக நடைபெறுவதுடன், நிதி வீண்விரயம் மற்றும் தாமதங்கள் தவிர்க்கப்படும் எனவும் குறித்த ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

Related posts

சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு மாத்திரம் ஆட்பதிவு திணைக்களத்தின் முக்கிய சேவை நாளை..!

தமிழ் எம்.பிக்களுக்கு அழுகிய தக்காளியில் அபிஷேகம்

இலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா