உள்நாடு

மஹாபொலவை அதிகரிக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) –     பல்கலைக்கழக மாணவர்களுக்குக்கு உதவியாக வழங்கப்படும் மஹாபொல பணத்தொகையை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மஹாபொல புலமைப்பரிசில் மூலம் சுமார் பதினாறாயிரம் பல்கலைக்கழக மாணவர்கள் பயனடைவார்கள் என தெரிவித்த அமைச்சர், தற்போது வருடத்திற்கு 1.6 பில்லியன் மஹாபொலவுக்காக ஒதுக்கப்படுவதாகவும், அந்த தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

அதன் படி, வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் வரவு-செலவுத் திட்டம் மீதான குழு விவாதத்தில் பங்கேற்று, வாடிக்கையாளர் சேவைச் சட்டம் விரைவில் திருத்தப்படும் என்று அவர் அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்

ஜெலக்னெட் குச்சிகளுடன் இருவர் கைது

பாராளுமன்ற நடவடிக்கைகள் வழமைக்கு