உள்நாடு

 கொலை சம்பவங்களுக்கு உதவியவர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

(UTV |ராகம ) –    கொலை சம்பவங்களுக்கு உதவியவர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

இரண்டு கொலை சம்வங்களுக்கு உதவி செய்த நான்கு சந்தேக நபர்களை கனேமுல்ல மற்றும் ராகம பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் வெலிப்பில்லெவ-கனேமுல்ல பகுதியில் வாடகை அறையில் தங்கியிருந்த போது ஹெரோயின் மற்றும் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அங்கிருந்து மற்றொரு சந்தேக நபரின் வெளிநாட்டு கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வேன் ஒன்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது .

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பங்களாவத்தை, கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவருமாவார்.
மேலும் , ஹெரோயின் போதைப்பொருளுடன் ஏனைய மூவரும் எலபிடிவல, ராகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 5 கிராம் 580 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கையடக்கத் தொலைபேசி, இலத்திரனியல் தராசு மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த மூவரும் 23, 24 வயதுடைய ராகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது

எரிபொருள் கப்பல் வரும் 22ம் திகதி நாட்டுக்கு

இத்தாலியில் இருந்து வந்த சடலம் தொடர்பில் விசாரணை