உள்நாடு

பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை – இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

(UTV | கொழும்பு) –     40 முழு ஆடைப் பால்மா கொள்கலன்கள் சட்டங்களைப் புறக்கணித்து மலேசியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

அதன் படி, 153,375 கிலோகிராம் முழு ஆடைப் பால் மாவைக் கொண்ட 40 கொள்கலன்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி மலேசியா ஊடாக கொழும்பு துறைமுகத்திற்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டங்களைப் புறக்கணித்து  கொண்டு வரப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த பால் மா கையிருப்பு கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, அவற்றை வெளியிடுவதற்கான விண்ணப்பம் இறக்குமதி கட்டுப்பாட்டாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர், வர்த்தக அமைச்சின் செயலாளரின் பரிந்துரையின் பேரில் மேலும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அனுமதியின்றி இந்த பால் மாவை வெளியிடுவதற்கான வாய்ப்பை உணவு பாதுகாப்பு, இலங்கை சுங்கம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பால் மா இறக்குமதிக்கு தடை விதிக்கப்படாததால் சந்தையில் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Related posts

தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டுமென ஜனாதிபதி பணிப்பு

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்கமாட்டோம் – பிரதமர் தினேஷ்.

கடந்த 24 மணித்தியாலத்தில் 35 கொரோனா நோயாளிகள்